துப்பாக்கி சூடு விவகாரம்.! எம்.எல்.ஏ இதயவர்மனுக்கு 15 நாள் நீதிமன்ற காவல்.!
எம்.எல்.ஏ இதயவர்மனை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க செங்கல்பட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டத்தில் வசிக்கும் திமுக எம்எல்ஏ இதயவர்மன் மற்றும் குமார் என்பவருக்கும் இடையே நிலத்தகராறு ஏற்பட்ட நிலையில் இதயவர்மன் குமாரை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தினார். இந்த சம்பவம் குறித்து இருதரப்பினரும் திருப்போரூர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.
துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக 4 டிஎஸ்பிக்கள் தலைமையில் தனிப்படைகள் அமைத்து விசாரணை மேற்கொள்ளப்படும் என்று கூறினார். மேலும், எம்.எல்.ஏ மீது ஐந்து பிரிவுகளில் கீழ் வழக்கு பதிவு செய்தனர். அதன் அடிப்படையில் சென்னை காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் வைத்து, தனிப்படை போலீசாரால் திமுக எம்எல்ஏ இதயவர்மன் கைது செய்யபப்ட்டுள்ளார்.
எம்.எல்.ஏ இதயவர்மன் உட்பட மேலும் 6 பேர் கைது செய்யப்பட்டனர். இதில், எம்.எல்.ஏ இதயவர்மனுக்கு மருத்துவ பரிசோதனை முடிந்து, செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
அவரை நீதிபதி காயத்ரி தேவி 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார். அவர் எம்.எல்.ஏ என்பதால், புழல் சிறையில் அடைக்கப்பட்டார். அவருடன் கைது செய்யப்பட்ட 6 பேருக்கு தற்போது மருத்துவ பரிசோதனை நடைபெற்றுவருகிறது. இந்த மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்ட பின்னர் அவர்களும் நீதிபதி முன்னர் ஆஜர்படுத்தப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.