#Breaking: பாலிவுட் நடிகை ஐஸ்வர்யா ராய்க்கு கொரோனா
பாலிவுட் நடிகை ஐஸ்வர்யா ராய் மற்றும் அவளின் மகளான ஆராத்யாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
பாலிவுட் நடிகர் அமிதாப்பச்சனுக்கு நேற்று இரவு கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில், அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனை தொடர்ந்து, அமிதாப்பச்சனின் மகன் அபிஷேக் பச்சனுக்கும் கொரோனா தொற்று உறுதியானது.
இந்நிலையில், பாலிவுட் நடிகை மற்றும் அமிதாப் பச்சனின் மருமகளான நடிகை ஐஸ்வர்யா ராய் மற்றும் அவரின் மகளான ஆராத்யாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்கள் மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.