தமிழகத்திற்கு ஊரடங்கு தேவையில்லை.! அடுத்த மாதம் ரயில் மற்றும் பேருந்துகளை இயக்கலாம்.!

நவம்பர் மாத இறுதியில் கொரோனா தொற்று பாதிப்பு குறைந்துவிடும். இனி தமிழகத்தில் ஊரடங்கு தேவையில்லை. அடுத்த மாதம் ( ஆகஸ்ட் ) முதல் பேருந்து, ரயில்களை இயக்கலாம். – பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருத்துவத்துறை முன்னாள் இயக்குனர் குழந்தைசாமி.
தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்த வண்ணம் இருக்கிறது. தலைநகர் சென்னையில் சற்று குறைந்து வந்தாலும், மற்ற மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்துக்கொண்டு இருக்கிறது.
இந்நிலையில் , சில நாட்களுக்கு முன்னர், புதுச்சேரி மக்கள் தொடர்பு கள அலுவலகம் சார்பாக ‘கொரோனா தொற்று குறித்த உண்மைகள், அதன் தடுப்பு முறைகள், விழிப்புணர்வு’ என்கிற தலைப்பில் புதுசேரியில் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருத்துவத்துறை முன்னாள் இயக்குனர் குழந்தைசாமி பேசுகையில், சென்னையில் பாதிப்பு குறைந்து வருகிறது. மற்ற ஊர்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வந்தாலும், கிராம பகுதிகளில் குறைவான அளவே பாதிப்பு இருக்கும்.
நவம்பர் மாத இறுதியில் கொரோனா தொற்று பாதிப்பு குறைந்துவிடும். இனி தமிழகத்தில் ஊரடங்கு தேவையில்லை. அடுத்த மாதம் ( ஆகஸ்ட் ) முதல் பேருந்து, ரயில்களை இயக்கலாம் என அவர் தெரிவித்தார். சில மாதங்களுக்கு மட்டும் 60 வயதிற்கு மேலானோர் வீட்டை விட்டு வெளியே வருவதை தவிர்க்க வேண்டும் எனவும், பொதுமக்கள், கட்டாய முகக்கவசம், சோப்பு போட்டு கைகழுவுதல், சமூக இடைவெளி போன்றவைகளை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும். எனவும் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருத்துவத்துறை முன்னாள் இயக்குனர் குழந்தைசாமி தனது கருத்துக்களை தெரிவித்தார்.
லேட்டஸ்ட் செய்திகள்
பெண்களை இழிவாக பேசிய விவகாரம்: “பொன்முடி மீது வழக்குப்பதிவு செய்க” – உயர்நீதிமன்றம் அதிரடி..!
April 17, 2025
வக்ஃப் திருத்த சட்டம்: ”இஸ்லாமியர்களின் வயிற்றில் பாலை வார்த்துள்ளது”- தவெக தலைவர் விஜய்.!
April 17, 2025
நடுவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட டெல்லி பயிற்சியாளர்! எச்சரிக்கை கொடுத்து அபராதம் போட்ட பிசிசிஐ!
April 17, 2025
உச்சநீதிமன்றம் என்ன சூப்பர் நாடாளுமன்றமா? கட்டத்துடன் கேள்விகளை வைத்த துணை குடியரசுத் தலைவர் ஜகதீப் தன்கர்!
April 17, 2025
கோவையில் தவெக பூத் கமிட்டி மாநாடு.! எப்போது தெரியுமா?
April 17, 2025