MAKING HISTORY.! அமெரிக்க கடற்படையில் முதல் கருப்பு இனபெண் விமானி.!
அமெரிக்க கடற்படை தனது முதல் கருப்பு பெண் தந்திரோபாய விமான விமானியை வரவேற்றுள்ளது.
இவர் ஜே.ஜி. மேட்லைன் ஸ்வெகல் கடற்படை விமானப் பள்ளியை முடித்துவிட்டார் என்றும் இந்த மாத இறுதியில் “தங்கத்தின் சிறகுகள்” என்று அழைக்கப்படும் விமான அதிகாரி சின்னத்தை பெறுவார் என்றும் அமெரிக்க கடற்படை ட்வீட்டர் பக்கத்தில் வியாழக்கிழமை ட்வீட் செய்துள்ளது .
இந்நிலையில் ‘MAKING HISTORY’ என்று கடற்படையின் முதன் முதலில் அறிமுகமான கருப்பு இன பெண் “TACAIR pilot” ஸ்வெகிள் என்று கடற்படை விமான பயிற்சி கட்டளை ட்வீட் செய்துள்ளது. மேலும் ஸ்டார்ஸ் அண்ட் ஸ்ட்ரைப்ஸின் கருத்தின்படி, ஸ்வெகிள் வர்ஜீனியாவின் பர்க் நகரைச் சேர்ந்தவர், மேலும் 2017 ஆம் ஆண்டில் அமெரிக்க கடற்படை அகாடமியில் பட்டம் பெற்ற்றவர்.
டெக்சாஸின் கிங்ஸ்வில்லில் உள்ள ரெட்ஹாக்ஸ் ஆஃப் பயிற்சிப் படை 21 க்கு அவர் நியமிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். 1974 ஆம் ஆண்டில் ரோஸ்மேரி மரைனர் ஒரு தந்திரோபாய போர் விமானத்தை பறக்கவிட்ட முதல் பெண்மணி ஆன 45 ஆண்டுகளுக்குப் பிறகு ஸ்வெக்கலின் மைல்கல் வந்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
MAKING HISTORY! https://t.co/jKJONHvL7S
— U.S. Navy (@USNavy) July 9, 2020