என்ஐஏ அலுவகத்திற்கு அழைத்து வரப்பட்ட ஸ்வப்னா.. சற்று நேரத்தில் நீதிமன்றத்தில் ஆஜர்.?
கேரளாவில் தங்கக்கடத்தல் வழக்கில் கைதான ஸ்வப்னா, என்ஐஏ அலுவலகத்திற்கு அழைத்துவரப்பட்டார்.
கேரளாவில் கடந்த சில தினங்களுக்கு முன் ஐக்கிய அரபு அமீரக தூதரகத்துக்கு ஒரு பார்சல் வந்துள்ளது. தூதரக முகவரியை வைத்து தங்கம் கடத்தப்படுவதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து, மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் அனுமதி பெற்று சுங்கத்துறை அதிகாரிகள் இந்த பார்சலை ஆய்வு செய்தனர்.
அப்போது, சுமார் ரூ. 15 கோடி மதிப்புள்ள 30 கிலோ தங்கம் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த தங்க கடத்தப்பட்ட விவகாரத்தில் தொடர்புத் துறையில் மேலாளராக பணியாற்றும் ஸ்வப்னா சுரேஷ்க்கு தொடர்பு இருப்பதும் தெரியவந்தது.
இதையடுத்து, தலைமறைவான ஸ்வப்னாவை என்ஐஏ அதிகாரிகள் தீவிரமாக தேடி வந்தனர். அப்பொழுது அவர் கேரளா உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் நேரடியாகவோ, மறைமுகவாகவோ இந்த தங்கக்கடத்தலில் ஈடுபடவில்லை என தெரிவித்துள்ளார்.
அதனையடுத்து, பெங்களூருவில் பதுங்கியிருப்பதாக என்ஐஏ அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்ததை அடுத்து, பெங்களுருவில் நேற்று இரவு ஸ்வப்னா மற்றும் சந்தீப் நாயரை கைது செய்தனர். அவரை இன்று மதியம் கொச்சியில் உள்ள என்ஐஏ அழைத்துவரப்படுள்ளதாக கூறப்பட்டது.
இந்நிலையில், கைது செய்யப்பட்ட ஸ்வப்னா மற்றும் சந்தீப் நாயரை என்ஐஏ அலுவலகத்திற்கு அழைத்து வந்தனர். மேலும் அவரை நீதிமன்றத்தில் இன்று மதியம் 3 மணிக்கு மேல் ஆஜர் படுத்துவதாகவும் தெரிவித்தனர்.