சித்த மருத்துவர் தணிகாசலத்திற்கு ஜாமீன் – சென்னை எழும்பூர் நீதிமன்றம்

சென்னை எழும்பூர் நீதிமன்றம், தணிகலாசத்திற்கு, நிபந்தனையுடன் கூடிய முன்ஜாமீன் வழங்கியது.

சென்னை, கோயம்பேட்டில் சித்த மருத்துவர் தணிகாசலம், சித்த மருத்துவமனை நடத்தி வருகிறார். இவர் கொரோனா வைரஸை அளிப்பதற்கு மருந்து கண்டுபிடித்து விட்டதாகவும், தமிழக முதல்வர் அனுப்பிய இருவருக்கு கொரோனா வைரஸை குணப்படுத்தி விட்டதாகவும் சமூக ஊடகங்களில் செய்திகள் பரவி வந்தது.

இதனையடுத்து, இதுகுறித்து சுகாதாரத்துறை புகார் அளித்ததை தொடர்ந்து, நோய்தொற்று தடுப்பு சட்டத்தின் கீழ் தணிகலாசத்தை, குண்டர் சட்டத்தின் கீழ் மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர். இதனை தொடர்ந்து இவர், சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில், ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தார்.

இதனையடுத்து, அவருக்கு சென்னை எழும்பூர் நீதிமன்றம், தணிகலாசத்திற்கு, நிபந்தனையுடன் கூடிய முன்ஜாமீன் வழங்கியதுடன், அவர் சென்னையை விட்டு வெளியே செல்ல கூடாது என்றும்,  எழும்பூர் தலைமை குற்றவியல் நீதிமன்ற நீதிபதி ரோஸ்லின்துரை  உத்தரவிட்டுள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.