ரஷ்யா அதிபர் தேர்தல் ஒரு நாடகம் ?

Default Image

ரஷ்யாவில் தஞ்சம் புகுந்துள்ள முன்னாள் அமெரிக்க உளவுத்துறை ஊழியர் எட்வார்ட் ஸ்னோடென்  நடந்து முடிந்த ரஷ்ய அதிபர் தேர்தலில் ஏமாற்று வேலை நடந்திருப்பதாக தெரிவித்துள்ளார்.

அமெரிக்க உளவுத்துறை என்.எஸ்.ஏ-வில் பணியாற்றிய ஸ்னோடென், அமெரிக்க அரசு, சட்டவிரோதமாக மக்களின் தொலைபேசி, இணைய பயன்பாடு ஆகியவற்றை கண்காணிப்பதாக குற்றம்சாட்டினார். இதுகுறித்து பல ஆதாரங்களை வெளியிட்ட அவர், நாட்டை விட்டு தப்பிச் சென்றார்.

பின்னர் அவர் ரஷ்யாவில் வாழ அந்நாட்டு அரசு அனுமதியளித்துள்ளது. கடந்த சில வருடங்களாக ரஷ்யாவில் வாழ்ந்து வரும் ஸ்னோடென், சமூக வலைதளங்களில் தொடர்ந்து பதிவிட்டு வருகிறார். பல உலக சம்பவங்களை பற்றியும், அரசுகளின் அத்துமீறல்கள் பற்றியும் பதிவிட்டு வரும் அவர் சமூக வலைதளங்களில் மிக பிரபலம்.

இந்தியாவின் ஆதார் அட்டையை கூட சமீபத்தில் அவர் விமர்சித்திருந்தார்.நேற்று நடந்து முடிந்த ரஷ்ய அதிபர் தேர்தலில் விளாடிமிர் புடின் மாபெரும் வெற்றி பெற்றார். இந்நிலையில், இதுகுறித்து பதிவிட்ட ஸ்னோடென், இந்த தேர்தல் ஒரு மிகப்பெரிய ஏமாற்று வேலை என தெரிவித்தார். ஒரு சிசிடிவி வீடியோவில், ரஷ்யா வாக்குச்சாவடியில், ஒருவர் வாக்களித்து விட்டு வெளியே சென்றவுடன், அங்குள்ள அதிகாரி, வாக்குப்பெட்டிக்குள் சில ஓட்டுக்களை போடுவது தெரிந்தது.

அதை குறிப்பிட்டு, இதை எதிர்த்து மக்கள் வெகுண்டெழுந்து போராட வேண்டும் என ஸ்னோடென் கூறினார். ஸ்னோடென் மட்டுமல்லாமல் அரசு சாரா தேர்தல் கண்காணிப்பக குழு ஒன்று, 2000 இடங்களில் தேர்தல் விதிமுறைகள் கணக்கிடப்பட்டுள்ளதாக தெரிவித்தது.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்