இரண்டு நாட்களுக்கு தலைமை செயலகம் மூடல்
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக, தலைமைச் செயலகத்தில் கிருமி நாசினி தெளிக்கப்பட உள்ளதால் இரண்டு நாட்கள் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே வருகிறது. அதில் குறிப்பாக, சென்னையில் நாள் ஒன்றுக்கு ஆயிரத்திற்கு மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று உறுதியாகி வருகிறது.எனவே கொரோனவை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில் கொரோனா தடுப்பு நடவடிக்கையான கிருமி நாசினி தெளித்தல், உள்ளிட்ட பணிகளுக்காக இன்று மற்றும் நாளை தலைமைச் செயலகம் மூடப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது .