BREAKING: புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு இலவச ரேஷன்.! உயர்நீதிமன்றம் உத்தரவு.!

தமிழகத்தில், கொரோனா வைரஸ் காரணமாக தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இந்நிலையில், வருகின்ற 31-ஆம் தேதிவரை ஊரடங்கு தமிழகத்தில் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கு காரணமாக மக்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து உள்ளன. இதைத்தொடர்ந்து, தமிழகத்தில் உள்ள புலம்பெயர் தொழிலாளர்கள் மிகவும் சிரமத்தில் உள்ளன.
இந்நிலையில், புலம் பெயர்ந்த தொழிலாளர்களை கண்டறிந்து, அவர்களுக்கு ரேஷன் பொருட்களை இலவசமாக வழங்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும், புலம் பெயர் தொழிலாளி மனைவியை மருத்துவமனையில் அனுமதிக்க மறுத்தது துரதிர்ஷ்டவசமானது என நீதிபதிகள் தெரிவித்தனர். புலம்பெயர் தொழிலாளி என்பதற்காக மருத்துவ வசதிகளை மறுக்கமுடியாது என நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.
இதைத்தொடர்ந்து, கோவையில் ஆட்டோவில் பிரசவித்த புலம்பெயர்ந்த தொழிலாளிக்கு தேவையான மருத்துவ வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கவும் உத்தரவு பிறப்பித்தது.
லேட்டஸ்ட் செய்திகள்
ஒரு மணிநேரம் மட்டும்., மீண்டும் திறக்கப்பட்ட திரௌபதி அம்மன் கோயில்! பட்டியலின மக்கள் மகிழ்ச்சியுடன் சாமி தரிசனம்!
April 17, 2025
ஏப்ரல் 16 ஐபிஎல் “சூப்பர் ஓவர்” நாளா? மீண்டும் மீண்டும் அதே நாளில் டெல்லிக்கு நடந்த சம்பவம்!
April 17, 2025