அதிபர் டிரம்புக்கு முல்லர் மீது நடவடிக்கை எடுத்தால் பதவியை இழக்க நேரிடும் என எச்சரிக்கை!
அமெரிக்க அதிபர் டிரம்ப் அமெரிக்க அதிபர் தேர்தலில் ரஷ்யாவின் தலையீடு இருந்ததாக கூறப்படும் விவகாரம் தொடர்பாக விசாரிக்கும் முல்லர் குழுவை தடுக்க முயற்சிப்பதாக குடியரசுக் கட்சி செனட் உறுப்பினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
எஃப்.பி.ஐ.யின் இணை இயக்குனராக இருந்த ஆண்ட்ரூ மெக் கேப் (Andrew McCabe) ஓய்வு பெறுவதற்கு இரண்டு நாட்கள் முன்னதாக பணி நீக்கம் செய்யப்பட்டார். முல்லர் குழுவின் விசாரணையை தடுப்பதற்காக அதிபர் டிரம்ப் இவ்வாறு செய்வதாக குடியரசுக் கட்சியின் செனட் உறுப்பினர்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.
முல்லர் குழுவை தனது கடமையைச் செய்ய விடுமாறு கேட்டுக் கொண்டுள்ள குடியரசுக் கட்சி உறுப்பினர்கள், முல்லரை பணி நீக்கம் செய்யும் பட்சத்தில் டிரம்பின் அதிபர் பதவிக் காலம் முடிவுக்கு வந்து விடும் என்று எச்சரித்துள்ளனர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.