இந்தியாவின் பிக் பாஸ் மோடி ………

Default Image
சென்னை : பிக் பாஸ்’ நிகழ்ச்சியால் கலாசாரச் சீர்கேடு நடப்பதாகவும், அந்நிகழ்ச்சியைத் தடை செய்துவிட்டு அதைத் தொகுத்து வழங்கும் கமல்ஹாசனை கைது செய்ய வேண்டும் என்றும் இந்து மக்கள் கட்சி கோரிக்கை வைக்க, கமல் இதுதொடர்பாக பேட்டியும் கொடுத்துள்ளார் .
அனைத்து ஊடகங்களிலும் இந்த ‘பிக் பாஸ் கமல்’ தொடர்பாகவே செய்திகள் வெளியிடப்பட்டு வருகின்றன. ஆனால், இப்போதைய இந்தியாவின் பிக் பாஸ் ஆக இருக்கும் பிரதமர் மோடியைப் பற்றியும், அவரது ஆட்சியைப் பற்றியும் தன்னைச் சந்தித்த இந்திய ஜனநாயக வாலிபர் சங்க தோழர்களிடம் கமல்ஹாசன் கூறிய கருத்துகளைத் தமிழில் எந்த வெகுஜன ஊடகமும் சிறிதாகக் கூட வெளியிடவில்லை. கேரளாவின் ‘தேசாபிமானி’ வெளியிட்டிருக்கிறது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் இளைஞர் பிரிவான அகில இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் தேசிய அளவில் மதவெறிக்கு எதிரான பிரசாரம் ஜூலை 5 முதல் 12 வரை நடைபெற்றது.
இதன் முடிவில் தேசிய மனித உரிமை கமிஷனைச் சந்தித்து மோடி அரசின் கீழ் இந்தியாவில் சிறுபான்மையினர், ஒடுக்கப்பட்டோருக்கு எதிராக நடக்கும் தாக்குதல்களைத் தடுத்து நிறுத்துமாறு ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் மனு கொடுக்க இருக்கிறார்கள்.
இந்த முயற்சிக்கு ஆதரவு கேட்டு ஒருபக்கம் மக்களைச் சந்தித்த ஜனநாயக வாலிபர் சங்கத்தினர், இன்னொருபக்கம் நடிகர் கமல்ஹாசன், நடிகை ரோகிணி உள்ளிட்ட  திரை ஆளுமைகளையும் சந்தித்தனர்.
அந்தவகையில், கடந்த ஜூலை 10ஆம் தேதி கமல்ஹாசனை ஜனநாயக வாலிபர் சங்கத்தின் அகில இந்தியத் தலைவர் முகமது ரியாஸ் சந்தித்தார். அப்போது, தேசிய மனித உரிமை ஆணையத்திடம் கொடுக்க இருக்கும் மனுவைக் கமலிடம் கொடுத்து முறைப்படி வெளியிடுமாறு கேட்டுக் கொண்டனர். அதை கமலும் ஏற்றுக்கொண்டார்
இந்தச் சந்திப்பில் முகமது ரியாஸோடு, ஜனநாயக வாலிபர் சங்கத்தின் தமிழ் மாநிலச் செயலாளர் பாலா, தீக்க திர் பத்திரிகையாளர் ஜாபர் ஆகியோர் உடன் இருந்தனர்.
இந்தச் சந்திப்பின்போதுதான் கமல்ஹாசன் மோடி ஆட்சி தொடர்பாக தனது கருத்துகளையும், மோடியின் இஸ்ரேல் பயணம் பற்றிய கருத்துகளையும் முன்வைத்துள்ளார்.
இதுபற்றி ஜனநாயக வாலிபர் சங்க வட்டாரங்களில் பேசினோம்… “கமல்ஹாசனைச் சந்தித்தபோது பல விஷயங்களை மனம்விட்டுப் பேசினார். மோடியின் இஸ்ரேல் பயணம் பற்றி பேச்சு தொடங்கியது. ‘பாலஸ்தீன மக்கள் எதிர்கொள்ளும் கொடிய தாக்குதல்கள் குறித்து இஸ்ரேலுக்கு மூன்று நாள்கள் பயணம் மேற்கொண்ட பிரதமர் மோடி ஒரு வார்த்தைகூட பேசாதது துரதிர்ஷ்டவசமானது. இந்தியா பாலஸ்தீனத்தை கைவிட்டுவிட்டது. குஜராத்தின் பிஞ்சுக் குழந்தைகளைப் போலத்தான் பாலஸ்தீனத்தின் பிஞ்சுக் குழந்தைகளும் என்பதை மோடியும் அவரது கூட்டாளிகளும் மறந்துவிடக் கூடாது’ என்று கவலையோடு கூறினார் கமல்.
மேலும், ‘தேசத்தில் மக்களைப் பிளவுபடுத்தும் சங் பரிவாரங்களின் போக்கு பலப்பட்டுள்ளது. இதற்காக 100 வருடங்கள் அவர்கள் முயற்சித்து வந்ததுதான் இப்போது அவர்களுக்குக் கிடைத்திருக்கும் பலன். மோடியின் ஆட்சியில் இப்போதுள்ளதைவிட மிகப்பெரிய ஆபத்தை இனி எதிர்பார்க்கலாம் சங் பரிவாரங்களின் நடவடிக்கை இனி இன்னும் தீவிரமாகவும் பயங்கரமாகவும் இருக்கும்,
ஏகாதிபத்தியத்தை நோக்கிச் செல்லும் ஆட்சியாளர்கள் எப்படி அழிந்து போனார்கள் என்பதை சரித்திரம் நமக்குக் கற்றுத் தந்துள்ளது. அதனால் நாட்டின் இந்தப் போக்கில் மாற்றம் வராது என்று கருத வேண்டியதில்லை. போராட்டங்கள் மூலம் மாற்றம் உண்டாகும். இந்தப் போராட்டத்தில் முக்கிய பங்கு வகிப்பவர்கள் இளைஞர்களே.
இந்தத் தீமைக்கு எதிரான போராட்டத்தில் உயிரே போனாலும் பரவாயில்லை என்று உறுதியோடு போராடுகிற அமைப்புகள் வர வர இந்தப் போராட்டம் வெற்றி பெறத்தான் செய்யும். இதற்கான வழிகாட்டும் அமைப்பாக வரலாற்றில் இந்தியாவே எதிர்பார்க்கும் அமைப்பாக ஜனநாயக வாலிபர் சங்கம் இருக்கிறது. பெரும்பான்மையாக உள்ள சாதாரண மக்களுக்காக ஆட்சி அதிகாரத்தை எப்படி மாற்றிக் காட்ட முடியும் என்பதை நிகழ்த்திக் காட்டிய தலைவர் இ.எம்.எஸ். நம்பூதிரிபாட்தான் என்பதை மறந்துவிட வேண்டாம்’ என்று தைரியம் தந்தார் கமல்ஹாசன்’’ என்றனர் ஜனநாயக வாலிபர் சங்க நிர்வாகிகள்

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்