கேரளாவின் தங்க கடத்தல் விவகாரம் – தலைமறைவான பெண்ணின் முன்ஜாமீன் மனு இன்று விசாரணை
கேரளாவை உலுக்கிய தங்க கடத்தல் விவகாரத்தில் தலைமறைவான ஸ்வப்னா சுரேஷின் முன்ஜாமீன் வழக்கு இன்று ஐகோர்டில் விசாரணைக்கு வருகிறது.
கேரளாவின் திருவனந்தபுரத்தில் உள்ள ஐக்கிய அரபு அமீரக தூதரகத்தின் பெயரில் 30கிலோ தங்கட்டிகளை கடத்தி வந்த சரக்கு விமானம் சுங்க அதிகாரிகளிடம் சிக்கியது. இந்த வழக்கில் கேரள தகவல் தொடர்பு துறையில் மேலாளராக பணியாற்றும் ஸ்வப்னா சுரேஷ்க்கு தொடர்பு இருப்பதாக தெரியவந்தது. மேலும் முன்னாள் தூதர ஊழியராக பணியாற்றிய சரித் மற்றும் மற்றும் அவரது மனைவிக்கும் இந்த வழக்கில் தொடர்புள்ளதாக கூறி பணியில் இருந்து நீக்கப்பட்டார். மேலும் கேரளாவின் முதல் மந்திரியான பினராயி விஜயன் அவர்களின் முதன்மை செயலாளரான சிவசங்கரும், தலைமறைவான ஸ்வப்னாவும் நெருக்கமானவர் என்று கூறப்பட்டது.
இதனையடுத்து சிவசங்கரை பதவியிலிருந்து நீக்கம் செய்தனர். சமீபத்தில் இந்த வழக்கின் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் தலைமறைவான ஸ்வப்னா சுரேஷ், கேரள உயர்நீதிமன்றத்தில் தனக்கும், இந்த கடத்தல் சம்பவத்திற்கும் எந்த வித சம்பந்தமும் இல்லை என்று கூறி முன்ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்திருந்தார். இதனையடுத்து இந்த மனு இன்று உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.