தோல்வியை மகிழ்ச்சியோடு ஏற்றுக் கொள்ளுங்கள்!
வெற்றியை விரும்புபவர்கள், தோல்வியை மகிழ்ச்சியோடு ஏற்றுக் கொள்ளுங்கள்.
இன்று தோல்வியை மகிழ்ச்சியாக ஏற்றுக் கொள்பவர்களை விட, அதனை கவலையோடு கடந்து செல்பவர்கள் தான் அதிகம். வாழ்க்கையில், நாம் பல வெற்றிகளை பெற வேண்டும் என விரும்புகிறோம். ஆனால், அந்த வெற்றியின் பாதையில் நடந்து செல்வதற்கு தோல்வி மிகவும் அவசியமான ஒன்று என்பதை நாம் புரிந்து கொள்வதில்லை.
இன்று பலராலும் பேசப்படக் கூடிய, சாதனையாளர்களை நினைத்து, நாமும் இவரை போல தான் வாழ வேண்டும் என லட்சிய கனவோடு வாழ்பவர்கள், அவர்கள் வெற்றியின் மறுபக்கத்தில் அவர்கள் சந்தித்த தோல்விகளை நினைத்துக் கூட பார்ப்பதில்லை.
தோல்வி என்பது ஒரு மனிதனை முற்றிலும் மடங்கடிப்பதற்கான வழி அல்ல. மாறாக அவன் பல கடினமான தடயங்களை தாண்டி அவனால் வெற்றிக் கொள்ள முடியும் என்ற தன்னம்பிக்கையை அவனுக்குள் வளர்த்து விடுவது தான் தோல்வி.
எவன் ஒருவன் தோல்வியை மகிழ்ச்சியாக ஏற்றுக் கொண்டு, அதன் மூலம் பல அனுபவங்களை கற்றுக் கொள்கிறான, அவனே எதிர்காலத்தில் மிகப் பெரிய வெற்றியை சந்திக்கிறான். சாதனையாளனாகவும் மாறுகிறான்.
பல வெற்றியை சந்தித்தவர்கள் வாழ்க்கையின், மறுபக்கத்தை புரட்டி பார்த்தால், அவர்கள் வாழ்க்கையில் தோல்வி என்பது அவர்கள் பெற்ற வெற்றியை விட அதிகமாக இருக்கும். எனவே, நாமும் நமது வாழ்வில் வெற்றியை பெற வேண்டும் என விரும்பினால், தோல்வியையும் விரும்பி ஏற்றுக் கொள்ள வேண்டும். இது தான் நாம் வெற்றியை பெறுவதற்கான சிறந்த வழி ஆகும்.