#BREAKING: சென்னையில் ஐ.டி நிறுவனங்கள் இயங்க தமிழக அரசு அனுமதி.!
தமிழகத்தில், கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்வதால் சில தளர்வுகளுடன் ஜூலை 31-ஆம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இந்நிலையில், சென்னை காவல் துறைக்கு உட்பட்ட பகுதிகளில் ஏற்கனவே பல பணிகளுக்கு அனுமதி அளித்து பல கட்டுப்பாடுகளுடனும் , தளர்வுகளுடனும் இந்த ஊரடங்கு நடைமுறையில் உள்ளது.
இதைத்தொடர்ந்து, தற்போது சென்னை பெருநகர காவல்துறை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் நோய் கட்டுப்பாட்டு பகுதியில் தவிர மற்ற பகுதிகளில் ஐடி நிறுவனங்களில் 10 சதவீத ஊழியர்களுடன் இயங்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.
சம்மந்தப்பட்ட ஐடி அந்நிறுவனம் ஏற்பாடு செய்யும் வாகனங்களில் சென்று அதிகபட்சமாக 10 சதவீத ஊழியர்கள் இயங்க அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது.