இறுதி முடிவு பெருநகர எல்லைகளைவிரிவுபடுத்துவது தொடர்பாக எடுக்கவில்லை!
சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தின் எல்லையை விரிவுபடுத்துவது தொடர்பாக இறுதி முடிவு எடுக்கவில்லை என தெரிவித்துள்ளது.
சென்னை பெருநகர வளர்ச்சி குழும எல்லையை ஆயிரத்து 189 சதுர கிலோமீட்டரில் இருந்து 8 ஆயிரத்து 878 சதுர கிலோமீட்டராக விரிவுபடுத்தி தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது. இதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுவில், ஏற்கனவே, சி.எம்.டி.ஏ. அதிகாரிகள் பணிச்சுமையால் தவித்து வருவதாகவும், எல்லைகள் விரிவுப்படுத்தப்பட்டுள்ளதால் கூடுதல் பணிச்சுமை ஏற்படும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. எல்லைகளை விரிவுபடுத்துவது குறித்து சென்னை மக்களின் கருத்துகள் கேட்கப்படவில்லை என்றும் கூறப்பட்டிருந்தது.
முந்தைய விசாரணையின் போது வீட்டுவசதி துறை செயலாளர், சி.எம்.டி.ஏ. உறுப்பினர் செயலர் பதிலளிக்க நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர். இந்நிலையில் சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்தின் எல்லையை விரிவுபடுத்துவது குறித்து இன்னும் இறுதி முடிவு எடுக்கவில்லை என்றும், மனு தொடர்பாக பதில் அளிக்க கால அவகாசம் அளிக்குமாறும் சி.எம்.டி.ஏ. தரப்பில் கோரப்பட்டது.
இதையடுத்து விசாரணையை வரும் 23-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.