கல்வியில் அரசியல் செய்ய வேண்டாம், சிபிஎஸ்இ பாடத்திட்டம் குறைப்பு – மத்திய அமைச்சர் விளக்கம்.! 

Default Image

சிபிஎஸ்இ பாடத்திட்டம் குறைப்பு குறித்து மாணவர்களின் எதிர்காலமான கல்வியில் அரசியல் செய்ய வேண்டாம் என்று மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் வலியுறுத்தி உள்ளார்.

கொரோனா பரவல் காரணமாக நாடுகள் எதிர்கொண்டு வரும் சூழலை கருத்தில் கொண்டு சிபிஎஸ்இ பாடத்தில் 9 முதல் 12ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு  பாடத்திட்டங்களில் 30 சதவீதம் வரை குறைக்கவுள்ளதாக மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரிவால் அறிவித்தார். அதாவது முக்கியமான உள்ளடக்கங்களை மட்டும் வைத்து கொண்டு பிற பகுதிகளில் இருந்து ஜனநாயக உரிமைகள், இந்தியாவின் உணவு பாதுகாப்பு, கூட்டாட்சி, குடியுரிமை மற்றும் மதசார்பின்மை உள்ளிட்ட தலைப்புகளில் உள்ள பாடப்பிரிவுகளை நீக்குவதாக கூறப்பட்டுள்ளது.

இந்த பாடத்திட்டம் குறைப்பு குறித்து பல்வேறு சர்ச்சைகளும், விமர்சனங்களும் எழுந்தன. இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் விளக்கமளித்த மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரிவால், குடியுரிமை, மதசார்பின்மை ஆகிய பாடப்பிரிவுகளை நீக்கியதற்கு சிலர் அரசியல் நோக்கம் கற்பித்ததாக விமர்சித்தனர். ஆனால் அந்த பாடப்பிரிவுகளுடன் உயிரியல், வேதியியல், இயற்பியல் ஆகிய பாடங்களின் சில பிரவுகளும் நீக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். கல்வி என்பது மாணவர்களின் எதிர்காலம், அதில் அரசியல் செய்ய வேண்டாம் என்று ரமேஷ் பொக்ரியால் வலியுறுத்தி உள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்