முகத்தில் உள்ள தழும்புகள் உங்கள் அழகை கெடுக்கிறதா? இதோ உங்களுக்காக சூப்பர் டிப்ஸ்!
முகத்தில் உள்ள தழும்புகள் நீங்கள் சூப்பர் டிப்ஸ்.
இன்றைய இளம் தலைமுறையினர் தங்களது சரும அழகை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தி வருகின்றனர். அந்த வகையில், இவர் தங்களது சரும அழகை மேம்படுத்துவதற்காக, அதிகப்படியான பணத்தை செலவு செய்து, பக்கவிளைவுகளை ஏற்படுத்தக் கூடிய கெமிக்கல் கலந்த கிரீம்களை வாங்கி உபயோகிக்கின்றனர்.
தற்போது இந்த பதிவில், முகத்தில் உள்ள தழும்புகளை இயற்கையான முறையில் நீக்க என்ன செய்ய வேண்டும் என்பது பற்றி பார்ப்போம்.
வேப்பிலை கொழுந்து
முகத்தில் பரு உள்ளவர்கள், வேப்பிலையை நன்கு அரைத்து, அதனை முகத்தில் தடவி, 10 நிமிடம் கழித்து கழுவ வேண்டும். இவ்வாறு செய்து வந்தால், முகப்பரு மறைவதோடு முகத்தில் உள்ள தழும்புகளும் மறைந்து விடும்.
முல்தானிமட்டி
வல்லாரை சாற்றுடன், முல்தானிமட்டி பவுடரை கலந்து பேஸ் பேக் போட்டு வந்தால், முகம் பொலிவடைவதுடன், தழும்புகளும் நீங்கி விடும்.