#live: கொரோனாவிற்கு எதிரான வலுவான போர்- மோடி..!

Default Image

டெல்லியில் நடைபெறும் மூன்று நாள் இணைய வழி குளோபல் வீக் மாநாட்டில் 5000 பேர் பங்கேற்று உள்ளனர். 30 நாடுகளில் இருந்து பிரதிநிதிகள் மாநாட்டில் பங்கேற்றுள்ளனர். இந்த மாநாட்டில் பிரதமர் மோடி உரையற்றினார்.

அப்போது, கொரோனாவிற்கு எதிரான வலுவான போரை இந்தியா நடத்தி வருகிறது. பேரிடர் காலத்தில் நாட்டு மக்களுக்கு தேவையான சலுகைகளை மத்திய அரசு வழங்கியிருக்கிறது.

இயற்கையை இறைவனாக வழிபடுவதுதான் இந்தியர்களின் மரபு. ஏழ்மை நிலையில் இருப்பவர்களுக்கு சிறப்பு நிதியை நேரடியாக சென்று சேர் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.  லட்சக்கணக்கான மக்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கும் திட்டத்தை மத்திய அரசு ஆரம்பித்துள்ளது.

வேலைவாய்ப்புத் திட்டத்தால் நகர்ப்புற பொருளாதாரம் மேம்படும். உலகில் உள்ள பெரும் நிறுவனங்கள் இந்தியாவில் தொழில் தொடங்க சாதகமான சூழல் நிலவுகிறது. விண்வெளித்துறையில் தனியாரும் கால்பதிப்பதற்காகன வாய்ப்புகளை உருவாக்கியுள்ளோம்.

இலவச சமையல் எரிவாயு, உணவுப் பொருட்கள், கடன் ஆகியவை பயனாளர்களுக்கு சென்று சேர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என மோடி தெரிவித்தார்.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

TN Assembly -Ajith Kumar
vaibhavsuryavanshi
Zipline operator
Ajith Kumar Pahalgam attack
Rajasthan Royals WON
Vaibhav Suryavanshi