பாஜக தலைவர் ஷேக் வாசிம் கொலை – பாதுகாப்பு போலீசார்கள் கைது!
ஜம்மு காஷ்மீர் ப.ஜா.க தலைவர் ஷேக் வாசிம், அவரது சகோதரர் மற்றும் தந்தை ஆகியோர் தீவிர வாதிகளால் சுட்டு கொள்ளப்பட்டது தொடர்பாக பாதுகாப்புக்கு நியமிக்க பட்டிருந்த காவலர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் பந்திப்பூர் மாவட்டத்தில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் அப்பகுதியை சேர்ந்த பாஜக தலைவராகிய ஷேக் வாசிம், அவரது சகோதரர் மற்றும் அவரது தந்தை ஆகிய மூவர் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் சம்பவம் நடந்த பொழுது உள்ளூர் காவல் நிலையம் அருகில் ஒரு கடையின் வாசலில் இவர்கள் அமர்ந்து இருந்ததாகவும், காயமுற்ற மூவரையும் காவல்துறையினர் தான் மருத்துவமனைக்கு கொண்டு சென்றதாகவும் கூறப்படுகிறது.
ஆனால் சிகிச்சை பலனின்றி அவர்கள் மூவரும் உயிரிழந்துள்ளனர். இந்த தகவல் அறிந்ததும் இந்திய பிரதமர் மோடி நள்ளிரவில் அவரது நிலைமை குறித்து விசாரித்ததோடு, உயிரிழந்தவர்களுக்கு தனது இரங்கலையும் தெரிவித்தார். இந்நிலையில் தீவிரவாதிகளால் நடத்தப்பட்ட இந்த தாக்குதல் பாதுகாப்புப் படையினரின் தோல்வியையே சுட்டிக்காட்டுகிறது எனவும், தாக்குதல் நடந்த பொழுது பாதுகாப்பு படையினர் யாருமே அங்கு இல்லை எனவும் உறுதியாகியுள்ளது.ஷேக் வாசிம்க்கு 8 வீரர்கள் பாதுகாப்பு பணிக்காக நியமிக்கப்பட்டு இருந்துள்ளனர். இதுகுறித்து அந்த பாதுகாப்பு படை வீரர்கள் அனைவரையும் கைது செய்து விசாரணை நடத்த காஷ்மீர் டிஜிபி விஜயகுமார் அவர்கள் உத்தரவிட்டுள்ளார்.