எஞ்சிய ஒரு தேர்வை எழுதாத மாணவர்களை தேர்ச்சி என அறிவிக்க முடியாது.!
பிளஸ்-2 வில் எஞ்சிய ஒரு தேர்வை எழுதாத மாணவர்களை தேர்ச்சி பெற்றதாக அறிவிக்க முடியாது.
கொரோனா வைரஸ் காரணமாககடந்த மார்ச் மாதம் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட நிலையில், தமிழகத்தில் கடந்த மார்ச் 24-ம் தேதி நடைபெற்ற +2 பொதுத்தேர்வுகளை பல மாணவர்கள் எழுத முடியாத சூழல் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து, அந்த தேர்வை எழுதாத மாணவர்களுக்கு ஜூலை மாதம் 27- ஆம் தேதி தேர்வு நடைபெறும் என நேற்று தமிழக கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்தார்.
இந்நிலையில், இன்று 12-ஆம் வகுப்பில் எஞ்சிய ஒரு தேர்வை எழுத 718 மாணவர்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர். மீதம் விண்ணப்பிக்காத 34,812 மாணவர்கள் தேர்வு எழுத விருப்பம் தெரிவித்தால் எழுதலாம். எஞ்சிய ஒரு தேர்வை எழுதாத மாணவர்களை தேர்ச்சி பெற்றதாக அறிவிக்க முடியாது என கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.