அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தின் உள் மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!
சென்னை வானிலை ஆய்வு மையம் தமிழகத்தின் உள் மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ளது.
கேரள கடற்பகுதி மற்றும் தென் கிழக்கு அரபிக்கடல் பகுதியில் காற்றின் மேல் அடுக்கு சுழற்சி காரணமாகவும், கிழக்கு திசை காற்றில் ஏற்பட்டுள்ள வேகம் மற்றும் திசை மாறுபாடு காரனமாகவும் தமிழகத்தில் மழைப் பெய்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.
அதிகபட்சமாக கடந்த 24 மணி நேரத்தில் உதகையில் 5 செண்டி மீட்டர் மழையும், மேட்டுப்பாளையத்தில் 4 செண்டி மீட்டர் மழையும் பதிவாகி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தின் உள் மாவட்டங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. சென்னையை பொருத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்று வானிலை மையம் கூறியுள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.