30 கிலோ தங்கம் கடத்தல்.! உடனடி நடவடிக்கை தேவை.! பிரதமருக்கு கேரள முதல்வர் கடிதம்.!

Default Image

திருவனந்தபுரம் விமான நிலையத்தில் 30 கிலோ தங்கம் கடத்தபட்ட வழக்கை பிரதமர் கவனத்தில் கொண்டு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேரள முதல்வர் பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

கடந்த ஜூலை 5ஆம் தேதி திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையத்தில் ஐக்கிய அரபு நாட்டில் இருந்து வந்த விமானம் ஒன்றில் வந்திறங்கிய ஸ்வப்னா சுரேஷ் என்பவரிடம் சோதனை நடத்திய போது சுமார் 15 கோடி மதிப்பிலான 30 கிலோ தங்கம் உரிய அனுமதியின்றி முறைகேடாக கடத்தப்பட்டு இருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவர் சுங்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.

இந்த வழக்கு தற்போது கேரள மாநில அரசு அதிகாரிகளால் விசாரிக்கப்பட்டு வரும் நிலையில், இந்த வழக்கை மத்திய அரசு கவனத்தில் கொண்டு மத்திய குற்றப்பிரிவு துறையினர் விசாரிக்க வேண்டும் என கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

அவர் எழுதியுள்ள கடிதத்தில், ‘ கடந்த 5ஆம் தேதி  திருவனந்தபுரத்திலுள்ள விமான நிலையத்தில் 30 கிலோ மதிப்பிலான தங்கம் கடத்தப்பட்டது. இதுதொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த 30 கிலோ அளவிலான தங்க கடத்தலானது, நாட்டினுடைய வர்த்தக வளர்ச்சியை பாதிக்கும் வகையில் அமைந்துள்ளது.

இதனால், இந்த வழக்கை தீவிரமாக விசாரிப்பதற்கு மத்திய குழு முன்வரவேண்டும். தற்போது மத்திய குழுவின் விசாரணையை உரிய தேவையாக உள்ளது. என்பதை குறிப்பிட்டுள்ளார். அதற்காக மாநில அரசு அனைத்து உதவிகளையும் அந்த மத்திய குழுவிற்க்கு அனைத்து உதவிகளையும் மாநில அரசு செய்து கொடுக்கும் என உறுதி அளிப்பதாக குறிப்பிட்டுள்ளார். இந்த வழக்கை விரைந்து பிரதமர் கவனத்தில் கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்.’ என கேட்டுக்கொண்டுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்