இன்று கொரோனா மட்டுமில்லமால் பிற நோயால் பாதிக்கப்பட்டு 59 பேர் உயிரிழப்பு.!
தமிழகத்தில் புதிதாக 3,756 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் 3,051 கொரோனா நோயாளிகள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 64 பேர் உயிரிழந்துள்ளதால், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1,700 ஆக அதிகரித்துள்ளது. இதில் தனியார் மருத்துவமனையில் 21 பேரும், அரசு மருத்துவமனையில் 43 பேர் உயிரிழந்துள்ளனர்.
இன்று உயிரிழந்தோரில் கொரோனா மட்டுமின்றி, மற்ற நோயால் பாதிக்கப்பட்ட 59 பேர் உயிரிழந்துள்ளதாகவும், தமிழகத்தில் கொரோனவால் மட்டும் பாதிக்கப்பட்ட 5 பேர் இன்று ஒரே நாளில் உயிரிழந்துள்ளனர். இதனால் உயிரிழந்தோரின் விகிதம் 1.38 சதவீதமாக அதிகரித்துள்ளது.