கேமராவில் குட்டிகளுடன் சிக்கிய அரியவகை கொரில்லா..!
நைஜீரியாவில் நாட்டில் உள்ள மலைக்காட்டு பகுதியில் சிக்கிய அரியவகை கொரில்லாக்கள் தனது குழந்தைகளை தூக்கி செல்லும் வீடியோ அங்குள்ள சிசிடிவியில் பதிவாகியுள்ளது.
குரங்குகளில் மனிதனை போல் செயல்படும் குரங்கு வகையில் கொரில்லா குரங்கு ஒரு வகை, இந்த கொரில்லா குரங்கு அளித்து கொண்டே தான் வருகிறது, மேலும் இவ்வாறு அழிந்து வரும் நிலையில் நைஜீரியா முழுவதும் தனிமைப்படுத்தப்பட்ட மலைப்பிரதேசத்தில் சுமார் 300 கிராஸ் ரிவர் கொரில்லாக்கள் மட்டுமே உயிருடன் இருப்பதாக வனவிலங்கு பாதுகாப்பு சங்கம் (WCS) தெரிவித்துள்ளது.
மேலும் இந்த மலைகளில் இந்த கொரில்லாக்கள் வெற்றிகரமாக இனப்பெருக்கம் செய்து வருகிறது, மேலும் கடந்த காலங்களில் மிகக் குறைவான கொரில்லாக்கள் மட்டுமே இருந்தன” என்று பேராசிரியர் ஓட்ஸ் கூறினார்.
நைஜீரியாவின் கடந்த 2012 ஆம் ஆண்டில் சுமார் 50 கேமராக்கள் அமைக்கப்பட்டன, மேலும் எம்பே மலைகள் சமூக வனப்பகுதி, அஃபி மலை வனவிலங்கு சரணாலயம் மற்றும் கேமரூனின் காக்வேன் கொரில்லா சரணாலயம் ஆகியவற்றில் பல கொரில்லா படங்கள் பிடிக்கப்பட்டுள்ளன.ஆனால் கிராஸ் ரிவர் கொரில்லாக்கள் கேமராவில் ஒன்றாகப் பிடிக்கப்படுவது மிகவும் கடினம், எந்தப் படங்களும் பல குழந்தைகளைப் பிடிக்கவில்லை. என்றும் கூறியுள்ளார்.