நம்பிக்கை இல்லா தீர்மானத்துக்கும்- காவிரி விவகாரத்திற்கும் சம்பந்தம் இல்லை?

Default Image

மு.க.ஸ்டாலின் , காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க நடவடிக்கை எடுக்காத மத்திய அரசுக்கு எதிர்ப்பைத் தெரிவிக்கும் வகையில் அதிமுக எம்பிக்கள் நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை ஆதரிக்க வேண்டும் என வலியுறுத்திய நிலையில்,துணை முதலமைச்சர் ஓ.பி.எஸ் காவிரி விவகாரத்திற்கும் நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று பதில் அளித்துள்ளார்.

சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் தாக்கல் செய்து பேசிய ஸ்டாலின், உச்சநீதிமன்றத் தீர்ப்பின்படி காவிரி மேலாண்மை அமைக்க வேண்டும் எனச் சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றியும் மத்திய அரசு இதுவரை எந்த நடவடிக்கை எடுக்கவில்லை எனத் தெரிவித்தார். இந்நிலையில் மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசுக்கு எதிர்ப்பைப் பதிவு செய்யும் வகையில் அதிமுக எம்பிக்கள் நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை ஆதரிக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

இதையடுத்துப் பேசிய துணைமுதலமைச்சர் பன்னீர்செல்வம், காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கும், நம்பிக்கையில்லாத் தீர்மானத்துக்கும் எந்தத் தொடர்பு கிடையாது எனத் தெரிவித்தார். உச்சநீதிமன்றம் விதித்த காலக்கெடுவுக்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படும் என எதிர்பார்ப்பதாகத் தெரிவித்தார். இது தொடர்பாக மார்ச் 29ஆம் நாளுக்குப் பின் அனைவரும் ஒன்றுகூடி அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து விவாதிக்கலாம் எனத் தெரிவித்தார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்