திடீர் விசிட் அடித்த வைரமுத்து!நடராசனை நேரில் சென்று சந்தித்து நலம் விசாரிப்பு …

Default Image

கவிஞர் வைரமுத்து, சென்னையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் புதிய பார்வை ஆசிரியர் நடராசனை நேரில் சென்று சந்தித்து நலம் விசாரித்தார். சோளிங்கநல்லூரில் உள்ள குளோபல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நடராசனின் உடல் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் நேற்று தெரிவித்திருந்தது.

இதை தொடர்ந்து குளோபல் மருத்துவமனைக்கு இன்று சென்ற கவிஞர் வைரமுத்து சிகிச்சை பெற்று வரும் நடராசனை சந்தித்து நலம் விசாரித்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த வைரமுத்து, தம்மை பார்த்ததும் நடராசன் கைகளை உயர்த்தி லேசாக சிரித்ததாகவும், அவரது உடல்நிலை முன்னேற்றம் கண்டு வருவதாகவும் தெரிவித்தார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்