இனி அத்தியாவசிய பொருட்கள் பட்டியலில் மாஸ்க், சானிடைசர் இல்லை.! மத்திய அரசு .!
கொரோனா பரவாமல் கட்டுப்படுத்துவதற்காக உபயோகிக்கப்படும் மாஸ்க், சானிடைசர் ஆகிய இரண்டு பொருட்களையும் அத்தியவசிய பொருட்கள் பட்டியலில் இருந்து மத்திய அரசு நீக்கியுள்ளது.
இந்தியாவில், கடந்த மார்ச் மாதத்தில் கொரோனா பரவத் தொடங்கியது. இதனால், நாடு முழுவதும் மாஸ்க், சானிடைசர் உபயோகிப்பது அதிகரித்தது. மாஸ்க், சானிடைசர் தேவையின் காரணம் காட்டி பல இடங்களில் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவதை தடுக்கும் நோக்கில் மாஸ்க் மற்றும் சானிடைசர் ஆகிய இரண்டு பொருட்களை ஜூன் வரைக்கும் மத்திய அரசு அத்தியாவசிய பொருட்களின் பட்டியலில் சேர்த்தது.
தற்போது, இந்தியாவில் கொரோனா வைரஸ் அதிகமாக பரவி வருகிறது. உலகளவில் கொரோனா பாதிப்பில் இந்தியா 3 -வது இடத்தில் உள்ளது. கொரோனா பரவுவதை தடுக்க மாஸ்க், சானிடைசர் உபயோகிக்க வேண்டும் என்று கூறிவரும் நிலையில் அத்தியாவசிய பொருட்கள் பட்டியலில் இருந்து மாஸ்க், சானிடைசரை மத்திய அரசு நீக்கியுள்ளது.
இந்த இரண்டு பொருட்களுக்கும் தட்டுப்பாடு இருப்பதாகவோ, அதிக விலைக்கு விற்பனை செய்வதாக புகார்கள் எதுவும் எழவில்லை என்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜூலை 1 முதல் இந்த உத்தரவு அமலுக்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.