சம்பளத்தை பாதியாக குறைத்து தயாரிப்பாளருக்கு உதவிய ரகுல் ப்ரீத்தி சிங்.! 

Default Image

தயாரிப்பாளர்களுக்கு உதவும் வகையில் தனது சம்பளத்தை 50%  குறைப்பதாக ரகுல் ப்ரீத்தி சிங் அறிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் காரணமாக கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக  படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டது மட்டுமில்லாமல் வேலைநிறுத்தமும் செய்யப்பட்டுள்ளது. இதனால் பலரின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக தயாரிப்பாளர்கள் அனைவருக்கும் பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. ஏனெனில் பல படங்களின் ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இதனால் ஹரிஷ் கல்யாண், விஜய் ஆண்டனி, மகத் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் தங்களது சம்பளத்தை குறைக்க தயாராக உள்ளதாக அறிவித்திருந்தார்கள். இதனால் தயாரிப்பாளர்கள் சிறிது மகிழ்ச்சியில் உள்ளனர். மேலும் முன்னணி நடிகர் மற்றும் நடிகைகள் தாமாக முன்வந்து சம்பளத்தை குறைக்க தயாராக வேண்டும் என்று தயாரிப்பாளர்களின் வேண்டுகோளாக உள்ளது.

இந்த நிலையில் தற்போது தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகையாக  வலம் வரும் ரகுல் ப்ரீத்தி சிங் தனது சம்பளத்தில் 50% குறைக்க தயாராக உள்ளதாக அறிவித்துள்ளார். இவர் தற்போது கமல்ஹாசனின் இந்தியன் 2 மற்றும் சிவக்கார்த்திகேயனின் அயலான் படத்திலும் நடித்து வருகிறார். கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள தயாரிப்பாளர்களின் நிலையை மனதில் கொண்டு தனது சம்பளத்தை 50% ஆக குறைத்துள்ளார். ஏற்கனவே 1.5கோடி ரூபாய் வரை சம்பளமாக வாங்கும் ரகுல் ப்ரீத்தி இனி ரூ. 75லட்சத்திற்கு நடிக்க தயாராக உள்ளதாக அறிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்