ஆதார், பான் எண் இணைப்புக்கு அவகாசம் நீட்டிப்பு.!
பான் மற்றும் ஆதார் எண் இணைப்புக்கு அவகாசம் அடுத்த ஆண்டு மார்ச் 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து கொண்டே செல்கிறது. இதனால், ஊரடங்கு கடந்த மார்ச் மாதம் முதல் அமலில் உள்ளது. இதைத்தொடர்ந்து, தற்போது சில தளர்வுகளுடன் ஊரடங்கு அமலில் உள்ளது. இந்நிலையில், வரி மற்றும் கட்டணம் செலுத்துவதற்கு கால அவகாசத்தை மத்திய அரசு நீட்டித்து வருகிறது.
நேற்று மத்திய நேரடி வரிகள் வாரியம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், பான் கார்டை, ஆதார் அட்டையுடன் இணைப்பதற்கான கால அவகாசம் அடுத்தாண்டு மார்ச் 31-ஆம் தேதி வரையில் நீட்டிக்கப்படுவதாக அறிவித்தது. இதற்கு முன் கடந்த மார்ச் 31 வரையிலும், பின்னர் ஜூன் 31 வரையிலும் நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதால் ஆதாரை பான் எண்ணுடன் இணைக்காத நபர்களுக்குக் கூடுதல் அவகாசத்தைப் பயன்படுத்தி இணைக்கலாம்.