கத்திரிக்காயில் இவ்ளோ இருக்கா ?
சத்துக்கள்
நீர்ச்சத்து அதிகம் கொண்ட கத்தரிக்காயில் வைட்டமின்கள் ஏ, சி, பி1, மற்றும் பி2,காணப்படுகின்றன. கத்தரிக்காய் காய்கறியாக பாவிக்கப்பட்டாலும்உண்மையில் இது பழ வகையைச் சார்ந்ததாகும். இது வெள்ளை, ஊதா, கறுப்புபோன்ற நிறங்களில் காணப்படுகின்றது. மேலும் இரும்புச்சத்து, புரதம்,நார்ச்சத்து கார்போஹைடிரேட், பாஸ்பரஸ், கால்சியம், நிறைந்துள்ளது.வைட்டமின் அதிகமாக இருப்பதால் நாக்கில் ஏற்படும் அலர்ஜியினைப்போக்குவதில் முக்கிய பங்காற்றுகிறது.
100 கிராம் கத்தரிக்காயில் ஊட்டச்சத்து – 1%, மாவுச்சத்து – 4%, புரதச்சத்து – 2%, கொழுப்புச்சத்து – 1%, நார்ச்சத்து – 9% மற்றும் போலேட்ஸ் – 5.5%, நியாசின் – 4%, போன்டோதெனிக் அமிலம் – 6%,
பைரிடாக்ஸின் – 6.5%, ரிபோஃப்ளேவின் – 3%, தயாமின் – 3%, விட்டமின் A- 1%, விட்டமின் C- 3.5%, விட்டமின் E- 2%, விட்டமின் K- 3%, பொட்டாசியம் – 5% ,
தாது உப்புக்களான சுண்ணாம்புச்சத்து – 1%, செம்புச்சத்து – 9%, இரும்புச்சத்து – 3%, மெக்னீசியம் – 3.5%, மாங்கனீசு – 11%, துத்தநாகம் – 1% ஆகிய சத்துக்கள் அடங்கியுள்ளது.
மருத்துவ நன்மைகள்?
- இதிலுள்ள நீர்ச்சத்து மற்றும் பொட்டாசியம் ரத்தத்தில் சேரும் கொழுப்பைக் குறைக்க உதவுகிறது.
- நார்ச்சத்து பசியை கட்டுப்படுத்தி, உடல் எடையை குறைக்க உதவுவதுடன், இதயத்தின் பலத்தை அதிகரிக்கிறது.
- இதிலுள்ள பல்வேறு ஊட்டச்சத்துகள் நம் உடலுக்கு மென்மை மற்றும் பலத்தை அதிகரிக்க உதவுகிறது.
- மலச்சிக்கலைப் போக்கி, சர்க்கரை நோய் வராமல் தடுக்கிறது.
- கால்களில் வீக்கம் ஏற்பட்டால், அதற்கு கத்திரிக்காயை அரைத்து வீக்கமுள்ள இடத்தின் மீது தேய்த்து வந்தால், வீக்கம் குறையும்.
- கத்திரிக்காயை வேகவைத்து அதனுடன் பெருங்காயம், பூண்டு, உப்பு சேர்த்து சூப் செய்து சாப்பிட்டால், வயிற்று தொடர்பான பிரச்சனைகள் குணமாகும்.
- வேகவைத்த கத்திரிக்காய் மற்றும் சிறிதளவு தேன் கலந்து மாலை நேரத்தில் சாப்பிட்டு வந்தால், தூக்கமின்மை அகலும்.
- கத்திரிக்காயை நெருப்பில் சுட்டு வேகவைத்து, அதனுடன் சர்க்கரை சேர்த்து வெறும் வயிற்றில் சாப்பிட்டால், மலேரியா, மண்ணீரல் வீக்கம் குறையும்.
- கத்திரிக்காய் அடிக்கடி உணவில் சேர்ப்பதால் இதயம், ரத்த நாளங்களில் ஏற்படும் நோய்கள் மற்றும் மாரடைப்பு ஏற்படுவது தடுக்கப்படும்.
- கத்திரிக்காயில் உள்ள சத்துக்கள் திசுக்களின் அழிவைத் தடுப்பதோடு, மூளைக்கு வலிமையை அதிகரித்து, ஞாபக சக்தியைத் தூண்டுகிறது.
- இதிலுள்ள வேதிப்பொருட்கள் உடலின் இரும்புச்சத்து மற்றும் ஹீமோகுளோபினை அதிகரிக்க உதவுகிறது.
- விட்டமின் C, நுண்கிருமிகளை தடுத்து, தொற்று நோய்களின் பாதிப்புகள் ஏற்படாமல் தடுக்கிறது.
- ஆன்த்தோ சயானின் எனும் வேதிப்பொருள் முதுமையை தடுத்து இளமை தோற்றத்தை பாதுகாக்க உதவுகிறது.
- பழுத்த கத்திரிக்காயை நல்லெண்ணெய் விட்டு வறுத்து சாப்பிட்டால், கடுமையான பல் வலி பிரச்சனைகள் குணமாகும்.
மற்றவர்கள் மருந்தைப்போல் கத்தரிக்காயை உணவில் சேர்த்து உடலுக்குநன்மை பெற வேண்டும். இக்காய் இளம் பிஞ்சாய் இருந்தால், சமையலில் சேர்த்துநாம் சாப்பிடும் மற்ற உணவுகள் விரைந்து சிதைந்து சத்தாக உடலுக்குக்கிடைக்க இது பயன்படும். வீட்டில் நன்கு உரமிட்டு வளர்க்கப்படும்கத்தரிச்செடியில் உள்ள பிஞ்சு உடலுக்கு வளத்தையும் வலிமையையும்தவறாமல் தரும்.