விளாடிமிர் புடின் ரஷ்ய அதிபராக மீண்டும் தேர்வு!
விளாடிமிர் புடின் ரஷ்யாவின் அதிபராக, 76 சதவிகித வாக்குகளுடன், மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அங்கு நடைபெற்ற தேர்தலில் 8 வேட்பாளர்கள் களம் கண்டனர். தேர்தல் முடிந்து வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. இதில், 76 சதவிகித வாக்குகளுடன், புதின் அமோக வெற்றி பெற்றார்.
இந்த வெற்றியின் மூலம், புடின் அடுத்த 6 ஆண்டுகளுக்கு ரஷ்ய அதிபராக பதவி வகிப்பார். தேர்தல் முடிவு குறித்து மாஸ்கோவில் ஆதரவாளர்கள் மத்திய பேசிய விளாடிமிர் புடின், கடந்த 5 ஆண்டுகளில் ரஷ்யாவின் முன்னேற்றத்திற்காக தாம் செய்த சாதனை பணிகளுக்கு கிடைத்த பரிசு என்றார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.