மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் ஆலோசனை!
சமூக செயற்பாட்டாளர்கள் மற்றும் வழக்கறிஞர்களுடன் மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் ஆலோசனை நடத்தி வருகிறார்.
சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள கட்சி அலுவலகத்தில் இந்த ஆலோசனை நடைபெறுகிறது. ஐ.டி. உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பணியாற்றி சமூக சேவைகளையும் செய்து வரும் செயல்பாட்டாளர்கள் 10-க்கும் மேற்பட்டோர் இந்த ஆலோசனைக் கூட்டத்துக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.
மேலும் மக்கள் நீதி மய்யக் கட்சியின் வழக்கறிஞர் உள்பட மொத்தம் 25 பேர் இந்த கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர். கட்சியின் வளர்ச்சி மற்றும் மேம்பாடு குறித்தும், நற்பணிகள் குறித்து இந்த ஆலோசனை நடைபெறுவதாகக் கூறப்படுகிறது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.