இங்கிலாந்து – தென் ஆப்பிரிக்கா இன்று மோதல்; பதிலடி கொடுக்குமா தென் ஆப்பிரிக்கா?.
இங்கிலாந்து – தென் ஆப்பிரிக்கா இடையிலான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தின் நாட்டிங்காம் நகரில் இன்று தொடங்குகிறது.
முதல் டெஸ்டில் 211 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றிப் பெற்றது இங்கிலாந்து அணி. அந்த வெற்றிக் களிப்போடு இந்தப் போட்டியிலும் மிகுந்த உற்சாகத்தோடு களமிறங்கும்.
அதேநேரத்தில் தென் ஆப்பிரிக்க அணி தோல்வியிலிருந்து மீள வேண்டும் என்ற வைராக்கியத்தோடு களம் காணும்.
இங்கிலாந்து அணியைப் பொறுத்தவரையில் ஆடும் லெவனில் எந்த மாற்றமும் இருக்காது. அதேநேரத்தில் தென் ஆப்பிரிக்க அணியில் இரு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
ஓர் ஆட்டத்தில் விளையாட தடை செய்யப்பட்டுள்ள வேகப்பந்து வீச்சாளர் காகிசோ ரபாடாவுக்குப் பதிலாக டுயான் ஆலிவர் களமிறங்கவுள்ளார்.
கேப்டன் டூபிளெஸ்ஸிஸ் அணிக்கு திரும்பியிருப்பதால் ஜே.பி.டுமினி நீக்கப்பட்டுள்ளார்.
விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் இந்த போட்டி நகரும் என்பதில் எந்த ஐயமும் இல்லை.
பிற்பகல் 3.30 மணிக்கு ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் நேரடி ஒளிப்பாகும். காணத்தவறாதீர்கள்.