டெல்லி கொரோனா மருத்துவமனையில் வீடியோ கால் வசதி.!
டெல்லியில் பிரமாண்டமான 10,000 படுக்கைகள் கொண்ட சர்தார் படேல் கொரோனா பராமரிப்பு மையத்தை நேற்று திறந்தனர்.
இந்த மையம் 1,700 அடி நீளம், 700 அடி அகலம் – தோராயமாக 20 கால்பந்து மைதானங்களின் அளவு கொண்டுள்ளது இது உலகிலேயே மிகப் பெரியது என்று அதிகாரிகள் கூறுகின்றனர். இங்கு சிகிச்சை பெற்று வரும் அணைத்து நோயாளிகளுக்கும் அவர்களின் உறவினர்களுடன் வீடியோ காலில் பேசும் வசதி ஏற்படுத்தி கொடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இவ்வாறு வீடியோ காலில் இவரது உறவினர்களுடன் பேசும் பொது அவர்களுது மன அழுத்தம் மற்றும் விரைவில் குணமடைவார்கள் என்ற எண்ணத்தில் இந்த வசதியை ஏற்படுத்தியுள்ளனர்.
மேலும் டி.ஆர்.டி.ஓ, உள்துறை அமைச்சகம், டாடா சன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் மற்றும் பல அமைப்புகளின் ஆதரவுடன் கொரோனா நோயாளிகளுக்கான 10,000 படுக்கைகள் கொண்ட இந்த தற்காலிக மருத்துவமனை வெறும் 12 நாட்களில் அமைக்கப்பட்டுள்ளது. WHO வழிகாட்டுதல்களின்படி 250 க்கும் மேற்பட்ட தீவிர சிகிச்சை பிரிவுகள் இங்கு இருக்கிறது என மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.