ஹீரோயின் கணக்கா கொள்ளை அழகுடன் இருக்கும் சிம்புவின் தங்கை.!
சிம்புவின் தங்கையான இலக்கியாவின் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவில் இயக்குநராகவும் , நடிகராகவும், பாடகர் என ஏகப்பட்ட துறைகளில் சிறந்து விளங்குபவர் டி. ராஜேந்திர். இவருக்கு சிம்பு, குறளரசன் மற்றும் இலக்கியா என்று மூன்று குழந்தைகள் உள்ளது அனைவரும் அறிந்ததே. தற்போது சிம்பு தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராகவும், குறளரசன் இசையமைப்பாளராக ‘இது நம்ம ஆளு’ படத்தின் மூலம் அறிமுகமானார்.
சிம்புவிற்கு தங்கை இலக்கியாவை மிகவும் பிடிக்கும். அதனை விஜய் டிவியில் கடந்தாண்டு ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசுகையில் ரசிகர்களுக்கு பின்னர் தனக்கு பிடித்த நபர்கள் தங்கை இலக்கியா மற்றும் அவரது மகன் என்று கூறியிருந்தார்.
சமீபத்தில் கூட தங்கை இலக்கியாவின் மகனுடன் உள்ள சிம்புவின் புகைப்படத்தை ரசிகர்கள் சோஷியல் மீடியாக்களில் வைரலாக்கியது குறிப்பிடத்தக்கது. தற்போது சிம்புவின் தங்கையின் புகைப்படத்தை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு வைரலாக்கி வருகின்றனர்.