அரசு அலுவலகங்களில் 50 % ஊழியர்கள் பணியாற்றலாம் – தமிழக அரசு
அனைத்து அரசு அலுவலகங்களும் 50 சதவீத ஊழியர்களுடன் பணியாற்ற வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் கொரோனா காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.தற்போது ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் சில தளர்வுகள் அளிக்கப்பட்டு உள்ளது.இதனிடையே தமிழ்நாட்டில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருப்பதால், ஏற்கனவே சென்னை காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் முழு பொது முடக்கம் அறிவிக்கப்பட்டிருந்தது.இந்த சமயத்தில் அரசு அலுவலகங்களில் 33 சதவீத பணியாளர்கள் மட்டும் பணியாற்றினால் போதும் என்ற உத்தரவு அமலில் இருந்தது.
இன்றுடன் நிறைவு பெற்ற நிலையில் தமிழக அரசு புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.அதாவது, அனைத்து அரசு அலுவலகங்களும் 50 சதவீத ஊழியர்களுடன் பணியாற்ற வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.மாற்றுத்திறனாளி, கர்ப்பிணி பெண் பணியாளர்கள் பணிக்கு வருவதில் இருந்து விலக்கு அளிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .பணிக்கு வராத நாட்களும் பணி செய்த நாட்களாகவே எடுத்துக்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது/