இந்தியாவில் கொரோனா பாதிப்பு! 3-வது இடத்தில் இந்தியா!
இந்தியாவில் கொரோனா பாதிப்பு மற்றும் உயிரிழப்பு விபரம்.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில், இந்தியாவிலும் இந்த வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த அரசு பல நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது.
உலக அளவில் கொரோனா வைரஸ் பாதிப்பில், இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ள நிலையில், இதுவரை இந்த வைரஸால் 697,836 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 19,700 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 424,891 பேர் இதுவரை குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில், 253,245 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.