சிமெண்ட் பைப்புக்குள் வாழ்க்கை : ஓபாடு வீடு (Opad home)…!!

Default Image

100 சதுர அடி மட்டுமே கொண்டுள்ள டியூப் வீடுகள், ஓபாடு(Opad home) வீடுகள் என்று அழைக்கப்படுகின்றன. இந்த வீட்டிற்குள் பெஞ்ச், மெத்தை, அலமாரி, மைக்ரோவேவ் ஓவன், ஏசி, பிரிட்ஜ், கழிவறை உள்ளிட்ட வசதிகளை அமைத்துக் கொள்ளலாம்.

ஹாங்காங்கை சேர்ந்த ஜேம்ஸ் லாவ்ஸ், பெரிய சிமெண்ட் பைப்புகளைக் கொண்டு சிறிய அளவிலான வீடுகளை உருவாக்கியுள்ளார்.

பல்வேறு பணிகளுக்காக சாலையோரம் கிடக்கும் பிரம்மாண்ட டியூப்களை, நம் நாட்டில் ஏராளமாக கண்டிருப்போம். அதில் அடிப்படை வசதிகள் இல்லாத மக்கள் தங்கியிருப்பர். இந்நிலையில் அத்தகைய பைப்புகளில் சொகுசான வீட்டையே ஹாங்காங் வடிவமைப்பாளர் உருவாக்கியுள்ளார்.
இதனை கட்டமைக்க 15,000 டாலர்கள் செலவாகும் என்று கூறப்படுகிறது. இவற்றை வாடகைக்கு விடுவதன் மூலம் மாதம் 400 டாலர்கள் வரை சம்பாதிக்கலாம். இந்த திட்டத்தை மிகக் குறைந்த விலையில் இந்தியாவிற்கு கொண்டு வரமுடியும் என்று கூறுகிறார்கள்.
எதிர்காலத்தில் மக்கள் தொகைப் பெருக்கத்தால் ஏற்படும் இட நெருக்கடியை தவிர்க்க ஓபாடு வீடுகள் தான் சிறந்தது என்று கூறப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்