#பூட்டான் விவகாரம்# பிற நாடுகளுக்கு வாய்ப்பூட்டு! சீனா பகிரங்கம்!

Default Image

“பூட்டான் விவகாரத்தில் மூன்றாவது நாடு தலையிட தேவையில்லை; எங்களை குற்றம்சாட்ட உரிமை கிடையாது என்று சீனா பகிரங்க  அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது”.

இந்திய எல்லைப்பகுதியான லடாக் எல்லையில், சீன ராணுவம் அத்துமீறி நடத்திய தாக்குதலுக்கு அமெரிக்கா, ரஷ்யா, இங்கிலாந்து,ஜப்பான், ஈராக்,உட்பட உலகின் பல நாடுகளும் கண்டனம் தெரிவித்து வருகின்றன.

இந்நாடுகள் அனைத்தும் எல்லை விவகாரத்தில் இந்தியாவுக்கு பகிரங்கமாக தங்களது ஆதரவினை தெரிவித்து உள்ளன. இந்தியா மட்டுமில்லாமல் அண்டை நாடுகள் அனைத்துடனும், சீனாவுக்கு எல்லை உட்பட பல்வேறு பிரச்னைகளை உருவாக்கி வைத்துள்ளது. இதில்  குறிப்பாக, பூடானை ஆக்கிரமிக்க சீனாத் தொடர்ந்து  தனது மூக்கை அங்கு நுழைக்க முயற்சித்து வருகிறது.

இவ்விவகாரத்தில் தனக்கு சம்பந்தம் இல்லாமல் போல காட்டிவந்த சீனா தற்போது  பூடானுடன் எல்லை பிரச்னை உள்ளதாக சீனா முதல்முறையாக வாய் திறந்து தெரிவித்துள்ளது.

See the source image

இந்நிலையில் இது பற்றி சீன வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: சீனா – பூடான் இடையேயான எல்லை, இதுவரை, சரியாக வரையறுக்கப்படவில்லை. எனவே பூடானுடன் எல்லை பிரச்னையானது மிக நீண்டகாலமாக உள்ளது.

இந்த பிரச்னைக்கு தீர்வு காண கடந்த 1984 முதல் 2016ம் ஆண்டு வரை, 24 முறை, சீனா-பூடான் பேச்சு வார்த்தைகளை நடத்தியுள்ளன. இந்த பிரச்னைக்கு தீர்வு காணும் திட்டங்களை  சீனா  தன்வசம் வைத்துள்ளது. மேலும் இந்த விவாகரப் பிரச்னையில் மூன்றாவது  ஒரு நாடு தலையிட தேவையில்லை; மேலும் சீனாவை குற்றம்சாட்டவும் அதற்கு உரிமையில்லை. என்று பகிரங்கமாக உலக நாடுகளுக்கு அறிக்கையில்  மூலமாக கூறியுள்ளதாக கூறப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்