நடிகை ஸ்ரீதேவி நாட்டிற்காக செய்தது என்ன?ஏன் அவருக்கு பொய் இதெல்லாம் ….சீரும் சேனா கட்சி ….
மகாராஷ்டிரா நவநிர்மான் சேனா கட்சி தலைவர் ராஜ் தாக்கரே ஸ்ரீதேவியின் உடலை தேசியக் கொடியால் போர்த்தும் அளவுக்கு நாட்டிற்காக அவர் என்ன செய்து விட்டார்? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
மும்பை சிவாஜி பூங்கா அருகே நடைபெற்ற கூட்டத்தில் பேசிய அவர், வங்கியில் மோசடி செய்து தப்பி ஓடிய நீரவ் மோடி குறித்து மக்கள் அதிகம் பேசிக் கொண்டிருந்த வேளையில், ஸ்ரீதேவி மரணம் குறித்த சர்ச்சைகளால் நீரவ் மோடி விவகாரம் மறக்கடிக்கச் செய்யப்பட்டு விட்டதாக தெரிவித்தார்.
ஸ்ரீதேவி பத்மஸ்ரீ விருது பெற்றவர் என்பதால் மூவர்ணக் கொடியை அவரது உடலில் போர்த்தியதாக அரசு விளக்கம் கொடுப்பதாக கூறிய ராஜ் தாக்கரே ஸ்ரீதேவி மிகப்பெரிய நடிகை என்ற போதிலும், நாட்டிற்காக அவர் என்ன செய்து விட்டார் என்று இந்த மரியாதை அளிக்கப்பட்டது என்றும் கேள்வி எழுப்பினார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.