நேற்றைய நாள் தான் தினேஷ் கார்த்திக் நாள்; சாதனை படைத்த தமிழன்…!!
தினேஷ் கார்த்திக் நாள்; 8 பந்துகளில் 29; கடைசி பந்து சிக்ஸ்: டி20 கோப்பையை வென்றது இந்தியா. கொழும்புவில் நடைபெற்ற நிதஹாஸ் கோப்பைக்கான முத்தரப்பு டி20 இறுதிப் போட்டியில் தினேஷ் கார்த்திக்கின் நம்ப முடியாத அதிரடியினால் வங்கதேசத்தை வீழ்த்தி கோப்பையை வென்றது இந்திய அணி. தோல்வியின் விளிம்பிலிருந்த இந்திய அணியை தனது அனாயாச அதிரடி மூலம் வெற்றி பெறச் செய்து தன் அனுபவத்தை வெளிப்படுத்தினார்.