ஜார்க்கண்ட் மாநிலத்தில் 10 ஆம் வகுப்பு தேர்வு முடிவு அடுத்த வாரம்.!
ஜார்க்கண்ட் மாநிலத்தில் 10 ஆம் வகுப்பு தேர்வு முடிவு அடுத்த வாரம் வெளியிடப்பட உள்ளது.
ஜார்க்கண்டில் இந்த ஆண்டு 10 ஆம் வகுப்பு தேர்வில் சுமார் 3.8 லட்சம் மாணவர்கள் கலந்து கொண்டனர். இதன் முடிவு ஜூலை 10 க்குள் அறிவிக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.
ஜார்கண்ட் கல்வி கவுன்சில் (ஜேஏசி) 10 ஆம் வகுப்பு தேர்வின் முடிவை அடுத்த வாரம் வெளியிடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜே.ஏ.சி-யின் தலைவர் அரவிந்த் பிரதாப் சிங் கூறியுள்ளார். இன்னும் சில மதிப்பீட்டு செயல்முறைகள் உள்ளது எனவும் அவை ஓரிரு நாட்களில் முடிந்துவிடும் இதனால் தான் அடுத்த வாரம் முடிவு அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிப்ரவரி 11 முதல் பிப்ரவரி 28 வரை நடைபெற்ற இந்த ஆண்டு 10 ஆம் வகுப்பு தேர்வில் சுமார் 3.8 லட்சம் மாணவர்கள் கலந்து கொண்டனர். ஜார்க்கண்ட் மாநில வாரியங்களின் முடிவுகள் வழக்கமாக மே மாதத்தில் அறிவிக்கப்படும் ஆனால் இந்த முறை கொரோனா காரணமாக தாமதம் ஏற்பட்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு, மொத்தம் 70.77 சதவீத மாணவர்கள் தேர்வில் வெற்றிகரமாக தேர்ச்சி பெற்றனர், 57 சதவீதம் பேர் இடைநிலை தேர்வில் தேர்ச்சி பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.