ஆப்பிளின்(Apple) தயாரிப்பு பொருட்களுக்கு நம்பமுடியாத கேஷ்பக் ஆபார்.!

Default Image

 

மராத்தி இந்துக்களின் பாரம்பரிய பண்டிகையையொட்டி, ஆப்பிள் நிறுவனத்தின் அங்கீகாரம் பெற்ற விற்பனையாளர்கள் ஆப்பிள் பொருட்களின் மீதான சுவாரசியமான சலுகைகளை அறிவித்துள்ளனர். அதாவது, கேஷ்பேக், நோ காஸ்ட் இஎம்ஐ மற்றும் பிற திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இந்த வாய்ப்பின்கீழ் கிடைக்கும் அதிகபட்ச கேஷ்பேக் ஆனது ரூ.10,000 ஆகும். அதே நேரத்தில் சில தேர்ந்தெடுக்கப்பட்ட வங்கி / நிதி நிறுவனங்களுடனான கூட்டுத்திட்டத்தின் கீழ் நோ காஸ்ட் இஎம்ஐ வாய்ப்பும் அணுக கிடைக்கும்.

கடந்த மார்ச் 12, 2018 முதல் சத்தமின்றி தொடங்கிய இந்த சலுகையானது ஜூன் 10, 2018 வரை நீள்கிறது. இந்த வாய்ப்பின்கீழ், ஒரு ஆப்பிள் ஐபோன் மீது ரூ.10,000/ -வரை கேஷ்பேக் கிடைக்கும். இஎம்ஐ பரிவர்த்தனைக்கான ஐசிஐசிஐ வங்கி கடன் அட்டையைப் பயன்படுத்தி நீங்களொரு ஐபோன் எக்ஸ்-ஐ வாங்குகிறீர்களானால், நீங்கள் ரூ.10,000/- என்கிற கூடுதல் கேஷ்பேக் வாய்ப்பையும் பெறலாம்.

கிடைக்கப்பெறும் கேஷ்பேக் ஆனது பணப்பரிவர்த்தனை செய்யப்பட்ட தேதியிலோ அல்லது அதற்கு அடுத்து வரும் 90 நாட்களுக்குள்ளாகவோ கிடைக்கும்.  ஐபோன் 8 மற்றும் ஐபோன் 8 பிளஸ் ஆகியவற்றின் மீது, ஐசிஐசிஐ வங்கி கடன் அட்டை வழியாக நிகழும் இஎம்ஐ பரிமாற்றத்திற்கு ரூ.8,000/- கேஷ்பேக் பெறலாம்.

மறுகையில் உள்ள ஐபோன் 7, ஐபோன் 7 பிளஸ் மீது ரூ.4,000/- கேஷ்பேக் பெறலாம். ஐபோன் 6 மற்றும் ஐபோன் 6 பிளஸ் மீது ரூ.3,000/- கேஷ்பேக் பெறலாம் மற்றும் ஐபோன் 6 மற்றும் ஐபோன் எஸ்இ ஆகியவற்றிற்கு ரூ.2,000/- கேஷ்பேக் பெறலாம்.

ஐபோன்கள் மட்டுமின்றி ஐபாட் மீதும் ரூ.5,000/- என்கிற கேஷ்பேக் வாய்ப்பு (அனைத்து மாடல்களில்) சலுகைகள் திறந்துவிடப்பட்டுள்ன. ஆப்பிள் வாட்ச் (அனைத்து மாதிரிகள்) மீதும் அதே அளவிலான (ரூ.5000/-) கேஷ்பேக் கிடைக்கின்றது.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்