“கொரோனா எவ்வாறு பரவதொடங்கியது?” ஆராய்வதற்கு சீனாவுக்கு குழுவை அனுப்பவுள்ள உலக சுகாதார அமைப்பு!

கொரோனா வைரஸ் பரவதொடங்கிய காரணம் குறித்து அடுத்த வாரம் சீனாவுக்கு குழு அனுப்பவுள்ளதாக உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் தெரிவித்தார்.

சீனாவில் பரவதொடங்கிய கொரோனா வைரஸின் தாக்கம், உலகளவில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்த வைரஸின் தாக்கத்தை கட்டுப்படுத்த, தடுப்பு மருந்தை கண்டுபிடிக்கும் நோக்கில் பல உலகாடுகள் தீவிரமாக ஈடுபட்டுவருகின்றனர். மேலும், உலகளவில் 1.13 கோடி மக்கள் கொரோனா தோற்றால் பாதிக்கப்பட்டனர்.

இந்த வைரஸ் தாக்கம் குறித்து உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் கடந்த சில நாட்களுக்கு முன், “இந்த வைரசின் தாக்கம் முடிவடைவதற்கான காலம் அருகில் கூட இல்லை என்பதுதான் கசப்பான உண்மை. இதனை கட்டுப்படுத்துவதற்காக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டாலும், அதன் தாக்கம் வேககமடைந்துள்ளது. மேலும், கொரோனாவின் மோசமான தாக்கம் இனிதான் வரும்” எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதன்காரணமாக, சீனாவில் கொரோனா வைரஸ் பரவும் காரணம் குறித்து ஆராய குழு ஒன்றை அனுப்பவுள்ளதாகவும் தெரிவித்தார். இந்நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்த உலக சுகாதாரத்துறை அமைச்சகத்தின் தலைவர் டெட்ரோஸ் அதானோம், கொரோனா வைரஸ் தொற்றைப்பற்றி அறிந்து கொள்வது மிகவும் முக்கியமானது என கூறினார்.

மேலும், இந்த வைரஸைப் பற்றி எல்லாவற்றையும் அறிந்திருந்தாலும், அது எவ்வாறு தொடங்கியது என்பதை நாங்கள் அறியவிருக்கிறோம். அதற்காக அடுத்த வாரம் ஒரு குழுவை சீனாவுக்கு அனுப்பவுள்ளம். அது வைரஸ் எவ்வாறு தொடங்கியது என்பதையும், இந்த வைரஸின் தாக்கத்தால் எதிர்காலத்தில் என்ன செய்ய முடியும் என்பதையும் புரிந்துகொள்ள வழிவகுக்கும் என அவர் தெரிவித்தார்.