தெலுங்குதேசம் கொறடா எம்.பிக்களுக்கு உத்தரவு!
தெலுங்குதேசம் கட்சி கொறடா மத்திய பாஜக அரசுக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவரப்படும் நிலையில் லோக்சபாவில் அனைத்து எம்பிக்களும் தவறாமல் ஆஜராக வேண்டும் என உத்தரவு பிறப்பித்துள்ளது.
தெலுங்குதேசம் கட்சி மத்திய பாஜக அரசுக்கு எதிராக 2 நம்பிக்கை இல்லா தீர்மான நோட்டீஸையும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் ஒரு நோட்டீஸையும் கொடுத்திருக்கிறது. இந்த தீர்மானங்களை சபை ஒப்புக் கொள்ள வேண்டும் என இரு கட்சிகளும் இன்று வலியுறுத்த உள்ளன.
தெலுங்குதேசம் கட்சி கொறடா இந்த நிலையில் எம்பிக்கள் அனைவரும் லோக்சபாவுக்கு வருகை தர வேண்டும் என உத்தரவை பிறப்பித்துள்ளது. அதேநேரத்தில் பாஜகவை கடுமையாக விமர்சிக்கும் சிவசேனா எந்த முடிவையும் எடுக்காமல் இருக்கிறது.சிவசேனாவின் முடிவு அரசியல் வட்டாரங்களில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.