கால்கள் கட்டப்பட்டு மர்ம முறையில் கொலை..! கும்பகோணம் அருகே பயங்கரம்
கும்பகோணம் அருகே தேனாம்படுகை ஆற்றங்கரைகளில் கடந்த வெள்ளிக்கிழமை மோகன் என்பவர் கொல்லப்பட்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கும்பகோணம் ஆனைக்காரன் பாளையம் பகுதியை சேர்ந்தவர் மோகன் 38 வயதான இவர் வாகன ஓட்டுநராக பணியாற்றி வந்தார் மேலும் இவருக்கு திருமணமாகி சில ஆண்டுகளில் கருத்து வேறுபாடு காரணமாக இவருடைய மனைவியை பிரிந்து விட்டார்.
இந்த நிலையில் கும்பகோணம் அருகே தேனாம்படுகை குடமுருட்டி ஆற்றங்கரையில் கடந்த வெள்ளிக்கிழமை மோகன் கால்கள் கட்டப்பட்டு ஆடை இல்லாமல் தலையில் ரத்ததுடன் இறந்துகிடந்தார், மேலும் இந்த சம்பவம் பற்றி தகவல் அறிந்த பட்டீஸ்வரம் காவல் நிலையம் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இந்த கொலை யார் செய்திருப்பார்கள் என்று போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.