வெறித்தனமாக பயிற்சியில் இறங்கிய விராட் கோலி..!
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டு வரும் நிலையில், ஊரடங்கு உத்தரவு கடைபிடிக்கப்படுகிறது. பொதுமக்களை மட்டுமின்றி, விளையாட்டு வீரர்கள் பலரும் வீட்டிலே முடங்கி இருப்பதால், பலரும் தங்களின் திறமையை சமூகவலைத்தளங்களில் வெளிக்காட்டி வருகின்றனர்.
இந்நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனான விராட் கோலி, தனது வீட்டிலே பலமணிநேரம் உடற்பயிற்சி செய்து வருகிறார். போட்டிகள் இருக்கோ இல்லையோ, அவரின் உடற்பயிற்சிக்கு முடிவே இல்லை. இதனால் அவரை ரசிகர்கள் “பிட்னஸ் கிங்” என அழைத்துவருகின்றனர் இந்த நிலையில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
View this post on Instagram