மும்பை மற்றும் அதை ஒட்டிய பகுதிகளுக்கு அடுத்த 24 மணிநேரத்திற்கு ரெட் அலர்ட்.!
இந்திய வானிலை ஆய்வு மையம் நேற்று மாலை வெளிட்ட செய்தி குறிப்பில் மும்பை, ராய்காட் மற்றும் ரத்னகிரிக்கு அடுத்த 24 மணிநேரங்களுக்கு ரெட் அலர்ட் விடுத்துள்ளது.
மும்பை மற்றும் சுற்றியுள்ள பகுதிகள் இடைவிடாது மிதமான முதல் கன மழை பெய்யக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியது. அடுத்த 24 மணிநேரங்களுக்கு, மும்பை, ராய்காட் மற்றும் ரத்னகிரிக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சில இடங்களில், அதிக மழை பெய்ய வாய்ப்புள்ளது” என இந்திய வானிலை ஆய்வு மையம் அதிகாரி ஒருவர் நேற்று இரவு தெரிவித்தார்.
இன்று பால்கர், மும்பை, தானே மற்றும் ராய்காட் மாவட்டங்களில் பல இடங்களில் அதிக முதல் மிக அதிக மழை பெய்யக்கூடும். சில இடங்களில் மிக அதிக மழை பெய்ய வாய்ப்புள்ளது” என்று அவர் கூறினார்.