இளம் நடிகருக்கு ஜோடியாகும் சாய் பல்லவி!

ப்ரேமம் படத்தின் மூலம் ஒட்டு மொத்த தென்னிந்திய சினிமா ரசிகர்களையும் கவர்ந்தவர் சாய் பல்லவி  . இவர் கரு என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகவுள்ளார்.

இதை தொடர்ந்து தற்போது தனுஷ், சூர்யா ஆகியோருக்கு ஜோடியாக இவர் தமிழில் நடித்து வருகின்றார்.

இந்நிலையில் மிஷ்கின் அடுத்து இளம் நடிகர் சாந்தனுவை வைத்து ஒரு படத்தை இயக்கவுள்ளார், இப்படத்திற்கு பி.சி.ஸ்ரீராம்ஒளிப்பதிவு செய்யவுள்ளார்.

இப்படத்திற்காக சாய் பல்லவியிடம் பேச்சு வார்த்தை நடந்து வருகின்றதாம், மிஷ்கின் என்பதால் அவரும் சம்மதித்துவிடுவார் என்று தெரிகின்றது.

அதுமட்டுமின்றி மெர்சல் நாயகி நித்யா மேனனிடமும் பேச்சு வார்த்தை நடந்து வருவதாக கூறப்படுகின்றது.

இதுக்குறித்து படக்குழு தரப்பில் இருந்து இன்னும் எந்த விளக்கமும் வரவில்லை, விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

author avatar
Dinasuvadu desk

Leave a Comment