எனக்கும் ஸ்ரீதருக்கும் எந்த தொடர்பும் இல்லை – அமைச்சர் கடம்பூர் ராஜு விளக்கம்

எனக்கும் ஸ்ரீதருக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார்.
சாத்தான்குளம் தந்தை -மகன் உயிரிழந்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.இது தொடர்பான வழக்கினை சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதற்கு இடையில் ,சாத்தான்குளம் தந்தை -மகன் உயிரிழந்த வழக்கில் காவல் ஆய்வாளர் ஸ்ரீதரை காப்பாற்ற அரசியல் ரீதியாக முயற்சி நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகி வருகிறது.ஆனால் இதற்கு இடையில் ஸ்ரீதரை சிபிசிஐடி கைது செய்து சிறையில் அடைத்தது.
இது குறித்து திமுக எம்.பி. கனிமொழி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவில்,அதிமுக குற்றவாளிகளை காப்பாற்றுகிறது என்று நாங்கள் சொன்னால் அரசியல் செய்கிறோம் என்கிறார்கள். இதற்கு எடப்பாடி பழனிசாமியும் அமைச்சர் கடம்பூர் ராஜுவும் என்ன பதில் சொல்லப்போகிறார்கள் என்று பதிவிட்டார்.
இந்நிலையில் அமைச்சர் கடம்பூர் ராஜு செய்தியாளர்களிடம் கூறுகையில் ,எனக்கும் ஸ்ரீதருக்கும் எந்த தொடர்பும் இல்லை.என்னையும் அவரையும் தொடர்பு படுத்தி பேசுவது தவறானது என்று தெரிவித்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
ஏப்ரல் 16 ஐபிஎல் “சூப்பர் ஓவர்” நாளா? மீண்டும் மீண்டும் அதே நாளில் டெல்லிக்கு நடந்த சம்பவம்!
April 17, 2025
நெல்லையில் பரபரப்பு: நாங்குநேரி மாணவன் சின்னத்துரை மீது மீண்டும் தாக்குதல் நடத்திய கும்பல்.!
April 16, 2025